
இன்று மற்றும் நாளை சில ரயில் சேவைகள் ரத்து
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனிவெளி ரயில் பாதையில் இன்று (22) மற்றும் நாளை (23) இயக்கப்படவிருந்த சில ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பெங்கிரிவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ரயில் சேவைகள் இன்று மற்றும் நாளை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
ரயில் எண் 9254 | காலை 08:30 கொழும்பு கோட்டை – அவிசாவளை (மெதுவானது)
ரயில் எண் 9260 | மதியம் 01:55 கொழும்பு கோட்டை – பாதுக்க (மெதுவானது)
ரயில் எண் 9261 | மாலை 04:00 கொழும்பு கோட்டை – அவிசாவளை (அரைக் கடுகதி)
ரயில் எண் 9657 | மதியம் 12:25 அவிசாவளை- கொழும்பு கோட்டை (மெதுவானது)
ரயில் எண் 9661 | மாலை 03:45 பாதுக்க – கொழும்பு கோட்டை (அரைக் கடுகதி)
எவ்வாறாயினும், இரவு நேரத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.