யுஎஸ்எய்ட்டில் பணியாற்றிய பல பணியாளர்களுக்கு நிர்வாக விடுமுறை!

யுஎஸ்எய்ட்டில் பணியாற்றிய பல பணியாளர்களுக்கு நிர்வாக விடுமுறை!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் யுஎஸ்எய்ட் எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் பல பணியாளர்கள் அமெரிக்க அரசாங்கத்தினால் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.

அதன்படி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்துக்கு பணியாற்றிய சுமார் 2 ஆயிரம் பணியாளர்களுக்கு இது குறித்து மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச உதவி நிறுவனமான சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் பணியாளர்களைக் குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சில வாரங்களுக்கு முன்னர் அறிவிப்பு விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும் இந்த நடவடிக்கையைச் சவாலுக்கு உட்படுத்திய அமெரிக்க பெடரல் நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.