
1,700 ரூபாய் வேதன அதிகரிப்பு சாத்தியமற்றது – பழனி திகாம்பரம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தில் 1,700 ரூபாய் அதிகரிப்பு என்பது சாத்தியமற்றது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியவற்றின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றப்படும் பட்சத்திலேயே இந்த பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப்பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.