உஸ்வெட்டகெய்யாவ துப்பாக்கிச்சூடு – பெண் ஒருவர் உட்பட 7 பேர் கைது

உஸ்வெட்டகெய்யாவ துப்பாக்கிச்சூடு – பெண் ஒருவர் உட்பட 7 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த 20 ஆம் திகதி இரவு உஸ்வெட்டகெய்யாவ மோகன்வத்த கடற்கரையில் ஆண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்தேக நபர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரியும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.