மனித உரிமைகள் பேரவையின் 58 வது அமர்வில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத்!

மனித உரிமைகள் பேரவையின் 58 வது அமர்வில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சற்று முன்னர் உரையாற்றினார்.

தேசிய மனித உரிமைகள் கட்டமைப்புகள் மூலம் அரசுகள் தங்கள் சவால்களை எதிர்கொள்ள ஊக்குவிக்கப்பட்டு அதிகாரமளிக்கப்பட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் உறுதிப்படுத்தினார்.