
அரசாங்கம் இன்று எரிபொருள் வரிசையை உருவாக்கியுள்ளது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் எரிபொருள் விநியோகம் முடங்கியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மீறியதால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளன. முறைமையில் மாற்றத்தை கொண்டு வர வந்த அரசாங்கம் இன்று எரிபொருளுக்கு வரிசையை ஏற்படுத்தியுள்ளது. இது தான் முறைமையில் மாற்றமா என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கைகள் தெரிந்தே மீறப்படும் போது இவ்வாறானதொரு நிலை உருவாகிறது. நாட்டை வினைத்திறனுடன் ஆள்வதற்கு அறிவும் தகுதியும் உள்ளவர்கள் இந்த அரசாங்கத்தில் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் ஒன்றியத்துனருடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதால், மக்களுக்கு சேவை வழங்குவோர் உட்பட சகலரும் எரிபொருள பிரச்சினையால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே அரசாங்கம் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய உடன்படிக்கைக்கு வர வேண்டும். தன்னிலையான சர்வாதிகார முடிவுகளை எடுக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அடிமைகளாக மாறியுள்ளது. மக்களின் உரிமைகள் மீறப்பட்டு வரிசைகளை உருவாக்கி மக்களை அவலப்படுத்தியுள்ள வேளையில் நாட்டை இவ்வாறு ஆள முடியாது. புதிய மக்கள் ஆணையை உருவாக்கி வலுவான உள்ளூராட்சி சேவை முன்னெடுக்க வேண்டிய தேவை எமக்கு வந்துள்ளது என வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறு சென்றால் 2028 ஆம் ஆண்டு கடனை அடைக்க முடியாது. விரைவான பொருளாதார வளர்ச்சி காணப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். 2028 ஆம் ஆண்டில் வரி வருமானம் குறைவடைந்து கடனை செலுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாயிக்கு 5000 ரூபாய்க்கு உரம் கொடுக்க நாம் முற்பட்ட போதும், 25000 நிவாரணத்தை நம்பி விவசாயிகள் ஏமாந்துள்ளனர். விவசாயிக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியே முன்நின்றது. ஆனால் எம்மை விவசாயிகள் நிராகரித்தனர். அதனால் இன்று விவசாயிகள் கவனிப்பார் அற்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர். பாராளுமன்றத்தில் விவசாயிகளினது பிரச்சினைகள் குறித்து பேசும் போது, எனது ஒலிவாங்கியை துண்டிக்கின்றனர். சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கூட பேச அனுமதிப்பதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.