கத்தார் வாழ் நேகமை சொந்தங்களின் இப்தார் நிகழ்வு மற்றும் உத்தியோகபூர்வ டி சேர்ட் வெளியீடு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கத்தார் வாழ் நேகமை சொந்தங்களின் இப்தார் நிகழ்வு மற்றும் உத்தியோகபூர்வ டி சேர்ட் வெளியீடு கத்தார் வெல்லோன் ரெஸ்டுரன்டில் கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. இந்த நிகழ்வு அமைப்பின் தலைவர் மௌலவி அப்துல் ரஹ்மானின் தலைமையில் இடம் பெற்றது.
இந்திகழ்வின் பிரதம பேச்சாளராக சட்டத்தரணி அஷ்ஷெய்க் முஜிபுர் ரஹ்மான் (நளீமி) கலந்து சிறப்பித்திருந்தார். இவ்வமைப்பு ஆறு வருடங்களுக்கு மேல் கத்தாரில் வசிக்கும் அனுராதபுரம் நேகமை உறவுகளின் சமூக அபிவிருத்தி, மற்றும் ஊரின் அபிவிருத்திக்காக பல்வேறுபட்ட பணிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்