
ஷான் புதா பிணையில் விடுவிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – துப்பாக்கியை வைத்திருந்த பிரபல பாடகர் ஷான் புதா மற்றும் அவரின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
அதேபோல், துப்பாக்கியை வழங்கியதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரியை ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.