தலதா கண்காட்சி தொடர்பில் பரவிவரும் போலி விளம்பரம்

தலதா கண்காட்சி தொடர்பில் பரவிவரும் போலி விளம்பரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் 18 முதல் 27 வரை நடைபெறவுள்ள விசேட தலதா கண்காட்சி தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தவறான விளம்பரம் குறித்து தலதா மாளிகை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் பொதுமக்களுக்கு ஒரு அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய போலி விளம்பரத்தை மேற்கோள் காட்டி, இந்தப் போலி விளம்பரம் Whatsapp ஊடாக பல்வேறு நபர்களுக்கு பகிரப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த போலி விளம்பரத்தில், தலதா மாளிகை கண்காட்சிக்கு யார் வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம் என்றும், நன்கொடை வழங்க விரும்புவோர் கணக்கின் விபரங்களை பெற்று அந்த வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிடுமாறும் குறித்த Whatsapp செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த விளம்பரம் முற்றிலும் தவறானது என்றும், ஸ்ரீ தலதா கண்காட்சிக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகை எந்தவொரு தனிநபர், குழு, அமைப்பு அல்லது வேறு எந்த வகையான நிதி திரட்டல் அல்லது வேறு எந்த நிறுவன நடவடிக்கையையும் நம்பி ஒப்படைக்கவில்லை என்று ஸ்ரீ தலதா மாளிகை பொதுமக்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)