
பிரபல நடிகர் ஹுசைனி காலமானார்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஹுசைனி காலமானார்.
இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை இவர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் 1986 ஆம் ஆண்டு வெளியான “புன்னகை மன்னன்” திரைப்படத்தில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் நடனக் கலைஞராக அறிமுகமானார்.
பின்னர், விஜய்யுடன் “பத்ரி” (2001) போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். அவர் நடிகர் மட்டுமல்லாமல், வில்வித்தை மற்றும் கராத்தே பயிற்சியாளராகவும் பணியாற்றியவர்.
நடிகர் விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஆகியோருக்கு கராத்தே பயிற்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஷிஹான் ஹுசைனி இரத்தப் புற்றுநோயால் (Blood Cancer) பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவர் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் உடற்கூறியல் பயன்பாட்டிற்காக தானம் செய்வதாக உருக்கமான வீடியோ ஒன்றை கடந்த தினம் வௌியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், தான் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பேன் என்றும், விஜய் மற்றும் பவன் கல்யாண் ஆகியோரை சந்திக்க விரும்புவதாகவும் கூறியிருந்தார்.