
ஆனையிறவு உப்பு – உறுதியளித்த அமைச்சர்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆணையிறவு உப்பு உற்பத்தி தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
‘இந்தப் பெயரைக் கண்டவுடன் சில அரசியல்வாதிகளும், சில ஊடகவியலாளர்களும், சில வலையொலி செய்பவர்களும் இதனைப் பெரிதுபடுத்துகின்றனர். இந்த உப்பளம் மூடியிருந்தபோது, இதனை முன்னெடுப்பதா இல்லையா என்பது தொடர்பாக எந்தவித பேச்சுக்களையும் இவர்கள் பேசவில்லை. ஆனால் ஒரு உண்மை உள்ளது; அந்த உண்மையை நான் அந்த நிகழ்வின் மேடையிலேயே தெரிவித்தேன். “ராஜ லுணு” எனும் பெயர் இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்ட பெயராகும். ஆகவே, நாம் எங்களுடைய பாரம்பரிய பெயரான “ஆணையிறவு உப்பு” என்பதை அறிமுகப்படுத்தி வெளியிடுகிறோம். எனவே, இது தொடர்பாக மக்கள் குழப்பமடைய தேவையில்லை. மக்களைக் குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் என்பது நமக்குத் தெரியும். இந்த நிகழ்வு முடிந்த உடனேயே நாம் இது தொடர்பாகப் பேசினோம். தற்போது தொழிற்சாலையைத் திறந்துவிட்டோம். சந்தைப்படுத்தல் பணிகள் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கும்போது, அதன் பெயர் நிச்சயமாக மாற்றப்படும்,’ என்றார்.