முஸ்லிம்களின் எதிர்ப்பார்ப்புக்களை சிதைத்த அரசாங்கம்: எழுந்துள்ள கண்டனம்

முஸ்லிம்களின் எதிர்ப்பார்ப்புக்களை சிதைத்த அரசாங்கம்: எழுந்துள்ள கண்டனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இஸ்ரேலின் செயற்பாடுகளை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய இலங்கையை சேர்ந்த இளைஞன் கைது செய்யபட்டமை, அரசாங்கத்திடம் முஸ்லிம் சமூகம் வைத்திருந்த எதிர்ப்பார்ப்புக்களை சிதைக்கும் விடயம் என முன்னாள் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தை உருவாக்க இந்நாட்டு முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பினை செய்திருக்கின்றார்கள். இருந்த போதிலும், அப்பாவி முஸ்லிம் இளைஞன் ஒருவரை ஒரு சுவரொட்டி ஒட்டியதற்காக கைது செய்து முதற்கட்டமாக பயங்கரவாத சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு சிறைப்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும். இதேபோன்று தான் கோட்டாபயவின் அரசாங்கத்தில் வேண்டுமென்று குற்றஞ் சாட்டப்பட்டு பல அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

COMMENTS

Wordpress (0)