
ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை ; அனுர குமார திஸாநாயக.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊழல் வாதிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக குறிப்பிட்டார்.
அரசின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களம் , ஊழல் தடுப்பு பிரிவு ஆகியவை உள்ளன அவர்கள் நடத்தும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்படும் தகவல்களுக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்கு பதிவு செய்யமுடியும்.அதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது நீதிமன்றின் கடமை.
நாம் எமது கடமையை நிறுவேற்றுகிறோம்,மோசடி மத்திரம் அல்ல குற்றச்செயல்கள் தொடர்பிலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலும் நாம் விசாரணை செய்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.