
உக்ரைனுக்கு $24 பில்லியன் இராணுவ உதவி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உக்ரைனுக்கு 21 பில்லியன் அமெரிக்க டொரலர் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளது.
டிரோன்கள், ஏவுகணைகள் வாங்கவும் இராணுவ வாகனங்கள் பழுது பார்க்கவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அழுத்தம் தரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
டொனால்ட் டிரம்பின் கீழ் அமெரிக்காவின் மாற்றப்பட்ட முன்னுரிமைகளால் ஏற்பட்ட இடைவெளியை ஐரோப்பா நிரப்ப முயன்றுள்ள நிலையில், வான் பாதுகாப்பு, ஏவுகணைகள் மற்றும் பிற உபகரணங்களை உறுதியளிக்க உக்ரைன் பாதுகாப்பு தொடர்பு குழுவின் உறுப்பினர்கள் பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோவின் தலைமையகத்தில் சந்தித்தபோது இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
டிரம்ப் போர் நிறுத்தம் செய்வதாக உறுதியளித்த போதிலும், போர் முடிவடைவதற்கான எந்த அறிகுறியையும் காணவில்லை என்று ஐரோப்பாவின் பாதுகாப்பு அமைச்சர்கள் தெரிவித்தனர்.