
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் தேசிய நிகழ்வு ஆரம்பம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிங்கள தமிழ் புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு இணைவாக இடம்பெறும் தலையில் எண்ணெய் தேய்க்கும் அரச உற்சவம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ஸ்ரீ மகா நாத தேவால வளாகத்தில் இன்று (16) காலை 9.04 சுப நேரத்தில் ஆரம்பமானது.
குறித்த நிகழ்வானது சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெறுகிறது.
இம்முறை தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பாரம்பரிய அரச நிகழ்வை ஊடக அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.