ஓட்டமாவடி – மீராவோடை ஆற்றில் மிதந்த சடலம்!

ஓட்டமாவடி – மீராவோடை ஆற்றில் மிதந்த சடலம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆற்றில் மிதந்து வந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சடலம் இன்று (18) அதிகாலை ஓட்டமாவடி – மீராவோடை மார்க்கட் பின் பகுதியிலுள்ள ஆற்றில் மிதந்து வந்துள்ளது.

ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்படாத வயோதிபர் ஒருவரின் சடலம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.