சேவல் சண்டை அரங்கில் துப்பாக்கிச் சூடு – பலர் பலி

சேவல் சண்டை அரங்கில் துப்பாக்கிச் சூடு – பலர் பலி

ஈக்வாடோர் நாட்டில் சேவல் சண்டையின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டதுடன், ஒன்பது பேர் காயமடைந்தனர்.

மனாபி மாகாணத்தில் வலென்சியாவில் உள்ள சேவல் சண்டை அரங்கில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

சண்டையை பார்க்க மக்கள் கூடியிருந்த நிலையில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு சுமார் 20,000 டொலர்கள் பரிசுத் தொகையைத் திருடிச் சென்றனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு டொமிங்கோவில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த தாக்குதல் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்த விசாரணை நடந்து வரும் சூழலில் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

COMMENTS

Wordpress (0)