
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த 167 பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் பட்டியலில் இணைப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்க விசுவாசிகளின் பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் என்ற அதிகாரபூர்வ புத்தக அகராதியில் சாட்சியாக இணைக்கப்பட்டுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தின் 6 ஆவது வருட நிறைவை முன்னிட்டு இன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்றுவரும் விசேட ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
திருத்தந்தையின் திருப்பீடமான வத்திக்கானில் இயங்கும் இறைமக்களை தூயவர்களாக வழிகாட்டும் திருத்துறை நம்பிக்கையின் சாட்சிகள் அடங்கிய அகராதியில் பெயர்களை பதிவு செய்யும் அதிகாரபூர்வ அறிவிப்புக்கான பிரகடனத்தை வாசித்த போதே மேற்கெண்டவாறு தெரிவித்தார்.