
பஸ் விபத்தில் 22 இராணுவ வீர்ரகள் காயம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ், எதிர் திசையில் வந்த லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 22 வீரர்கள் காயமடைந்து வத்துபிட்டிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், 20 வீரர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, சாரதி மற்றும் ஓர் இராணுவ வீரர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
நிட்டம்புவ-கிரிந்திவெல சாலையில் உள்ள மணமால வளைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.