
சி.ஐ.டி.யில் இருந்து வௌியேறிய மைத்திரி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி, பல மணி நேரம் வாக்குமூலம் அளித்த பிறகு, முன்னாள் ஜனாதிபதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.