தேசபந்து தென்னகோனை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை!

தேசபந்து தென்னகோனை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10 ஆம் திகதி தேசபந்து தென்னக்கோனுக்கு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கிய நாளில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி நீதிமன்ற வளாகத்துக்குள் காரை செலுத்திச் சென்றது தொடர்பான ஆதாரங்களை முன்வைக்க மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தயாராக இருப்பதால், தேசபந்து தென்னக்கோனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் 10 ஆம் திகதி பிணையில் விடுதலையானபோது தேசபந்து தென்னகோனின் வழக்கறிஞர்கள், அவரது காரை நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வந்து அழைத்துச் செல்ல அனுமதி கோரினார்கள், மேலும் அவர் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும் வரை பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரினர். ஆனால் நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.

இருப்பினும், அந்த உத்தரவை மதிக்காமல் தேசபந்து தென்னகோன் நீதிமன்ற வளாகத்திலிருந்து ஒரு சொகுசு காரில் சென்றதை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

COMMENTS

Wordpress (0)