டேன் பிரியசாத் கொலை – மூவர் கைது

டேன் பிரியசாத் கொலை – மூவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து விசாரணை செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கொலையை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த காஞ்சிபானை இம்ரானின் பிரிவினர் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று இரவு, வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் வைத்து சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு ஒரு விருந்தின் போது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டேன் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது தோள்பட்டையில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக்களும், மார்பில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக்களும் காணப்படுதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

COMMENTS

Wordpress (0)