வத்திக்கான் புறப்பட்டார் விஜித

வத்திக்கான் புறப்பட்டார் விஜித

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளார்.

இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எதிஹாட் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அமைச்சர் அபுதாபி விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் வத்திக்கானுக்கு பயணிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று மாலை இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளனர்.

இலங்கையின் கத்தோலிக்க அரசியல் அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, இந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக இணைந்து கொள்ளவுள்ளனர்.

இதற்கிடையில், திருத்தந்தையின் இறுதி ஆராதனை  நடைபெறும் நாளைய தினம் (26) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

COMMENTS

Wordpress (0)