
இறக்காமம், வரிப்பத்தான்சேனை வடக்கு வட்டார மக்களுக்கு நன்றி தெரிவித்தார் தாஹிர் எம்பி…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தலில் வரிப்பத்தான்சேனை வடக்கு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ. றப்சாத் அவர்கள் வெற்றியீட்டியிருந்தமைக்காக நன்றி நவிலல் நிகழ்வு நேற்று (07) இடம்பெற்றிருந்தது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வேட்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.
இதில் பாராளுமன்று உறுப்பினரின் பிரத்தியோகச் செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா உட்பட கட்சியின் இறக்காமம் பிரதேச முக்கிஸ்த்தர்கள், பொது மக்களெனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
-ஊடகப் பிரிவு-