
பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட தீர்மானத்தின் ஊடாக தனது அடிப்படை மனித உரிமைகள் மீறுப்படுவதாக தீர்ப்பளிக்கக் கோரியே குறித்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான இமேஷா முத்துமால, பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.