பெற்றோலியக் கூட்டுத்தாபன முக்கியஸ்தர்களுக்கு பொதுமக்களின் வரிப்பணத்தில் ஐபோன் கொள்வனவு!!!

பெற்றோலியக் கூட்டுத்தாபன முக்கியஸ்தர்களுக்கு பொதுமக்களின் வரிப்பணத்தில் ஐபோன் கொள்வனவு!!!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன முக்கியஸ்தர்கள் இருவருக்கு பொதுமக்களின் வரிப்பணத்தில் ஐபோன் இரண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 16 ரக இரண்டு தொலைபேசிகளே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்காக 711,900 மொத்தமாக செலுத்தப்பட்டுள்ளது. அதாவது ஐபோன் ஆடம்பர தொலைபேசியொன்றுக்கு 355,950 வீதம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஐபோன்களை கொள்வனவு செய்வதற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நடைமுறை வங்கிக் கணக்கில் இருந்து 0043051 இலக்க காசோலை பயன்படுத்தப்பட்டுள்ளது.

கூட்டுத்தாபன தலைவர்களுக்கு நிறுவன செலவில் வாகனம், எரிபொருள், தொலைபேசிக் கட்டணம் போன்றவை மட்டுமே இதுவரை வழங்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்ட ஐபோன் வாங்கும் கலாசாரமொன்றை முதற்தடவையாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அவ்வாறு நிறுவனமொன்றின் தலைவருக்கு தொலைபேசி கொள்வனவு செய்வதாக இருந்தால் கூட குறைந்த விலையில் தரமான தொலைபேசியொன்றைக் கொள்வனவு செய்திருக்கலாம்.அனைத்திலும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதாகவும், ஊழல், மோசடிகளை அறவே ஒழிப்பதாகவும் வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் முக்கியஸ்தர்கள் இவ்வாறான ஆடம்பரப் பொருட்களை பொதுமக்களின் வரிப்பணத்தில் தனிப்பட்ட தேவைக்காக கொள்வனவு செய்வது ஊழல் இல்லையா?

இதன் பெயர்தான் மறுமலர்ச்சி யுகமா?

சரி.. இன்னொரு புறம் இந்த அண்டப்புளுகர்களின் ஆட்சியில் திணைக்களங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் முக்கியஸ்தர்கள் போன் ஒன்றைக்கூட பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வக்கில்லாத பிச்சைக்காரர்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் குறைந்த விலையில் தரமான தொலைபேசிகளை கொள்வனவு செய்வதுதானே? ஐபோன் தான் தேவையா?

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் குடைகள், குடிதண்ணீர் போத்தல் வரை கிண்டலடித்தவர்கள் இப்போது ஒன்றுக்கும் உதவாத வெறும் திணைக்கள தலைவர்களுக்கு ஐபோன் வாங்கிக் கொடுப்பது தப்பில்லையா? தேசிய மக்கள் சக்தி செய்தால் தவறுகள் எல்லாம் தவறுகளே இல்லை என்று ஆகிவிடுமா?

ஊழலை ஒழிப்பதாக ஆகாசப் புளுகொன்றை அவிழ்த்துவிட்டு பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் தங்களின் ஐபோன் கனவுகளைக் கூட பொதுமக்களி்ன் வரிப்பணத்தைக் கொண்டே நிறைவேற்றிக் கொள்கின்றார்கள்.

இப்படியானவர்கள் தான் ஊழலை ஒழிக்கப் போகின்றார்களா? அல்லது ஊழலை பெருப்பிக்கப் போகின்றார்களா? பொறுத்திருந்து பாருங்கள்.. புரியும்.. ஆனால் அப்போது நாடு மீண்டும் பாதாளத்திற்குள் வீழ்ந்திருக்கும்

COMMENTS

Wordpress (0)