
நாட்டின் சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு வௌியிடப்பட்டுள்ள இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு நாளை பிற்பகல் 2.00 மணிவரை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தென்மேற்கு பருவநிலையின் தீவிரம் காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் சில இடங்களிலும், 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.