
கொழும்பு – காலி பிரதான வீதியில் துப்பாக்கிச் சூடு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – காலி பிரதான வீதியில் ரன்தொம்பே பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (26) அதிகாலை 01.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ரன்தொம்பே பிரதேசத்தில் உள்ள உணவகத்துக்கு முன்பாக சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது துப்பாக்கிதாரிகள், உணவக உரிமையாளரை தீவிரமாக கண்காணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.