முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (4) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சோள விதைகளை விநியோகித்த சம்பவம் தொடர்பாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகியிருந்தார்.

வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர், முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.

COMMENTS

Wordpress (0)