
மறைந்த அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரின் இறுதிக்கிரியை இன்று
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மறைந்த அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் இறுதிக்கிரியை இன்று (24) இடம்பெறவுள்ளது.
அதற்கமைய, அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் பூதவுடல் இன்று (24) கண்டி அஸ்கிரிய பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் பூரண அரச அனுசரணையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் கடந்த 20ஆம் திகதி கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். காலமாகும் போது அவருக்கு வயது 67 ஆகும்.
மறைந்த ஆனமடுவே தம்மாதஸ்ஸி தேரரின் பூதவுடல் தற்போது அஸ்கிரி மகா விகாரையின் உடுகம ஸ்ரீ புத்தரக்கித மகா தேரர் ஞாபகார்த்த மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.