துப்பாக்கி சூட்டில் பலியான சிறை அதிகாரி தொடர்பில் வௌியான பகீர் தகவல்

துப்பாக்கி சூட்டில் பலியான சிறை அதிகாரி தொடர்பில் வௌியான பகீர் தகவல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டாரகவில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் சிறை அதிகாரி, மாகந்துரே மதுஷின் டுபாய் விருந்தில் பங்கேற்றவர் என்றும், ஒழுங்கமைப்பட்ட குற்றவாளியான சமயங் கொலை குறித்து தகவல்களை வழங்கியதாக குற்றஞ் சாட்டப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம – போல்கொட துன்போதிய பாலம் அருகே நேற்று (21) மாலை 6:05 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

பாணந்துறையிலிருந்து பண்டாரகம நோக்கிச் சென்ற காரின் சாரதியை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

காரை துரத்தி சென்று துப்பாக்கி சூடு நடத்தும் விதம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

சந்தேகநபர்கள் சுமார் 29 முறை துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் களுத்துறை நோக்கி தப்பிச் சென்றதுடன், துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் காரிலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பாணந்துறை, அலுபோகஹவத்தையைச் சேர்ந்த லலித் குமார கோதாகொட என அடையாளம் காணப்பட்டுள்ளார்

அத்துடன் அவர் பணிநீக்கம் செய்யப்பட்ட சிறை அதிகாரி எனவும் தெரியவந்துள்ளது.

கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் உயிரிழந்தவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

உயிரிழந்தவர், 2021 ஆம் ஆண்டு டுபாயில் இடம்பெற்ற மாகந்துரே மதுஷின் பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை எதனமடல பகுதியில் சிறைச்சாலை பேருந்தில் சமயங் உள்ளிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒத்து வழங்கியதாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் கொலைக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

COMMENTS

Wordpress (0)