வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெல்லம்பிட்டி – கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய 3 சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.