
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் நிச்சயம் உயர்த்தப்படும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதன் படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (12) பண்டாரவளையில் இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அமைச்சர் சமந்த வித்யாரத்ன மேலும் தெரிவிக்கையில்,
“லயத்தில் வாழ்பவர்களும் மனிதர்களே. அதனால் அவர்களுக்கான காணியை வழங்குவது மாத்திரமல்ல நாம் வழங்கிய வாக்குறுதியின் படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாய் வரை உயர்த்துவதற்கு உறுதி அளிப்பதாக தெரிவித்தார்.