
சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இந்த பிணை உத்தரவை பிறப்பித்தார்.