13 மில்லியன் பெறுமதியுடைய ஹெரோயினுடன் “ஹைப்ரட் சுத்தா” கைது…

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய “ஹைப்ரட் சுத்தா” எனப்படும் சமீர ரசாங்க குணசேகர (37 ), 1.100Kg ஹெரோய்னுடன் இன்று(18) அதிகாலை பாதுக்க- நெட்டிஒலுவ பிரதேசத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 7,50,000 ரூபாய் பணமும் இரண்டு கார்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோய்னின் பெறுமதி 13 மில்லியன் பெறுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் சகா என்பதும் குறிப்பிடத்தக்கது.