13 வயதில் பருத்த மார்பகங்கள் மாணவிக்கு பள்ளி நிர்வாகம் எச்சரிக்கை.!!

அமெரிக்காவில் உள்ள மிசெளரி மாவட்டத்தில் உள்ள ஒரு பாட­சாலையில் படிக்கும் 13 வயது மாணவிக்கு மார்பகத்தை சிறிதாக்க செய்யும் அறுவை சிகிச்சை செய்ய பாட­சா­லை நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக  மாணவியின் தாய் முறைப்­பாடு  தெரி­வித்­துள்­ளார். அமெரிக்காவின் சென்றல் மிடில் பாட­சா­லையில்  6ஆம் தரத்­தில் படித்து வருகிறார் இந்த மாண­வி. அவருக்கு வயது மீறிய பெரிய மார்பகம் இருப்பதால் சக மாணவர்களால் கேலி மற்றும் கிண்டலுக்கு உட்படுவதால், பாட­சா­லை நிர்வாகம், மாணவியின் தாயாருக்கு போன் செய்து  மாணவியின் மார்பகங்களை சிறிதாக்க அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் பாட­சாலை நிர்வாகம் மீது முறைப்­பாடு கொடுத்­துள்­ளார். கேலி செய்யும் மாணவர்களை கண்டிக்க நடவடிக்கை எடுக்காமல் தனது மகளின் மார்பகங்களை சிறிதாக்க அறுவை சிகிச்சை செய்ய பாடசா­லை நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக கூறிய புகாரை மறுத்துள்ள பாடசாலை நிர்வாகம், தாங்கள் அறுவை சிகிச்சையை ஒரு ஆலோசனையாகத்தான் கூறியதாகவும், கட்டாயப்படுத்தவில்லை என்றும், மேலும் மாணவியை கேலி செய்த மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விளக்கம் கூறியுள்ளது.