
நிதியமைச்சரின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இன்னும் திகதி குறிக்கப்படவில்லை
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் திகதி குறிக்கப்படாமல் உள்ளாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. முன்னதாக கருத்து தெரிவித்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, நம்பிக்கையில்லா பிரேரணைக்காக திகதி குறித்து தருமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கேட்டார்.
இதனிடையே எழுந்த அவைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, 20016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளமையால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்து விட்டது என்றார்.