
பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க திட்டம்
உள்ளூராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்க கொள்கை ரீதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களது எண்ணிக்கை மூன்றில் ஒரு மடங்காக அதிகரிக்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
