டிலானின் கருத்துக்கு என்னிடம் பதிலில்லை – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

பிரபாகரனுடனான டீல் பற்றிய டிலானின் கருத்துக்கு நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. டிலானிடமே தான் விளக்கம் கோர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடந்த 2005ம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பிரபாகரனுடன் “டீல்” போட்டதனால் தான் அவரால் வெற்றிபெற முடிந்தது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து ஊடகமொன்று மஹிந்த ராஜபக்ஷ வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

டிலான் பெரேரா எம்முடன் இருந்த எங்களில் ஒருவர். அவரைப் பற்றி என்னால் எதுவும் கூறமுடியாது. என்னைப் பற்றி அவர் தெரிவித்தால் அவரிடமே தான் கேட்க வேண்டும்.

அமைச்சர் டிலான் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் பற்றி தெரிவித்த கருத்துக்கு என்னால் எதுவும் கூற முடியாது. அதனை நாமலிடம் தான் கேட்க வேண்டும் எனவும் அவர் மேலும் மேலும் குறிப்பிட்டார்.