சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன், ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரின் பயணப்பொதியில் இருந்து 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான, 142 சிகரட் பெக்கட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த கைது செய்யப்பட்ட நபர் களனி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.