14 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நால்வரும் இந்தியாவின், மும்பையிலிருந்து இலங்கைக்கு வந்தபோதே தங்க ஆபரணங்களுடன் சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களுள் மூன்று பெண்களும் அடங்குவதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுங்கப் பிரிவு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.