சீன பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 14 வயது பாடசாலை சிறுவன் தெகிவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளான்
பிரயாண முகவர் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றுகின்ற சீன பெண் இச்சிறுவனின் வீட்டில்தான் அறை எடுத்து தங்கி உள்ளார்.
அறையில் தூங்கிக் கொண்டிருந்தவரையே சிறுவன் துஷ்பிரயோகம் செய்து இருக்கின்றான்.
பிற்பாடு உடல் முழுவதும் மசாஜ் பண்ணி விட சொல்லி பெண்ணை சிறுவன் கேட்டு இருக்கின்றான். பெண் மறுத்து விடவே நன்றாக முகத்தில் அறைந்து இருக்கின்றான். இதை தொடர்ந்தே பொலிஸில் பெண் முறையிட்டார்.
பெண் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சிறுவனை கைது செய்து கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கினர்.
சிறுவனை நீதிவான் 200000 ரூபாய் பிணையில் விடுவித்தார்.