(FASTNEWS|COLOMBO) யாழ்ப்பாணம், பளை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த 140 கிலோ 800 கிராம் கேரள கஞ்சா, பளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நேற்று(05) பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.