140 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

(FASTNEWS|COLOMBO) – மன்னார் கடற்கரையில் 140 கிலோ பீடி இலைகளை மது வரித் திணைக்களத்தினால் நேற்று(26) கைப்பற்றப்பட்டுள்ளது.

படகு மூலம் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு இறக்கப்பட்ட நிலையில் இருந்த பீடி இலைகளை மது வரித் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதனை கொண்டுவந்தவர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மன்னார் மது வரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.