எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, 22 தேர்தல் மாவட்டங்களில் 14 மாவட்டங்களை வெற்றிகொண்டு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் என கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கைகள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் முன்வைக்கப்படும் எனவும் முதலாவது தேர்தல் பேரணி ஜூலை மாதம் 17ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறும் எனவும் சுசில் பிரேமஜயந்த, இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
(riz)