
நல்லாட்சியின் ஒரு வருட பூர்த்திக்கு ஒருவாரம் தேசிய கொடியேற்றல்
நல்லாட்சியை கொண்ட நாடு உருவாகி எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ளதால், அனைவரும் தமது வீடுகளில் தேசிய கொடிகளை ஏற்றி அதனை அனுஷ்டிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் இதனை கூறியுள்ளார். இதனை தவிர ஜனவரி 8 ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு அமைச்சுக்களிலும் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டிருக்கும்.
மேலும் அபிவிருத்தியுடன் தொடர்புடைய பல நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாகவும் கபீர் ஹசீம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.