1456 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு…

(FASTNEWS|COLOMBO) மன்னார் தெற்கு கடற் பரப்பில் வைத்து, 33 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த 1456 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

குறித்த பீடி இலைகள் கடலில் மிதந்து வந்த நிலையில் அவை கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.