மறக்கவோ மறுக்கவோ முடியாத காமவெறியனுக்கு பலியான இலங்கையின் இளம் சிட்டு சேயாவினை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. அவ்வாறே மறக்க முடியாத மற்றுமொரு காமவெறிய சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில், மெல்பன் நகரில் இடம்பெற்றுள்ளது.
15மாதம் நிரம்பிய பச்சிளம் பாலகன்.. ஆம், குறித்த குழந்தையின் தாய் குழந்தையினை தொட்டியில் இட்டு ஒலிம்பிக் மைதானத்தினுள் அழைத்துச் செல்கையில் முகமறியாத நபரொருவர் தாயினை தாக்கி குழந்தையினை கடத்திச்சென்று காமப்பசிக்கு ஆளாக்கியுள்ளான்.
குழந்தையின் இறந்த சடலமானது, மறுநாள் குறித்த மைதானத்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.
அப்பாலகனின் பெயர் சனாயா.. இவளின் தாயின் வயது 22…
குழந்தையினை தூக்கிக்கொண்டு குறித்த நபர் மைதானத்திற்கு அருகிலுள்ள கடைவரிசைக்கு ஓடியுள்ளார். அதன் பின்னாலேயே ஓடிய தாய்க்கோ குறித்த நபர் குழந்தையுடன் எக்கடையினுள் நுழைந்தார் என்பதை கண்டுபிடிக்க முடியாமையினால் பொலிஸில் சென்று முறையிட்டுள்ளார்.
ஆனால், குறித்த தாய் வாக்குமூலத்தில் குழந்தையினை கடத்திய நபரின் முகத்தினை தெளிவாகக் காணவில்லை எனத்தெரிவித்துள்ளார்.
மரணம் குறித்த பரிசோதனை இதுவரை வெளியிடப்படாத நிலையில் முழு உலகினையினையும் இந்நிகழ்வு உலுக்கியுள்ளது.
இன்னும், குறித்த கொலைகாரன் என சந்தேகிக்கும் குறித்த நபர் கைதாகவில்லை என்பதோடு, அந்நாட்டு பொலிசாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
[youtube url=”https://www.youtube.com/watch?v=Vh7LedDWHPA” width=”560″ height=”315″]

