அமெரிக்காவிலுள்ள 15 கியூபா தூதரக அதிகாரிகள் எதிர்வரும் 7 நாட்களில் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க உள்துறை செயலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹவானாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் சிலருக்கு உடல் உபாதை ஏற்பட்டது. அவ் அதிகாரிகளை கியூபா பாதுகாக்க தவறிவிட்டதாக தெரிவித்து அனைத்து தூதரக அதிகாரிகளும் விடுமுறையில் சென்றனர்.
இந்நிலையில், வாஷிங்டன் நகரில் உள்ள கியூபா தூதரக அதிகாரிகள் 15 பேர் கொண்ட குழு, 7 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க உள்துறை செயலகம் உத்தரவிட்டுள்ளது.