15 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்…

குளவி தாக்குதலுக்கு உள்ளாகி தோட்டத் தொழிலாளர்கள் 15 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தின் குயின்ஸ்லேண்ட் பிரிவில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்களே, இன்று(02) காலை இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 பேரும் பெண்கள் எனவும், இவர்களில் 12 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 3 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.